இந்திய அணியில் தோனி எப்படி இடம் பெற்றார்? தெரியாத விஷயத்தை பகிர்ந்த சபா கரீம்!

தோனி எப்படி இந்திய அணிக்குள் வந்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் தெரியாத சில விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

Former Indian Cricketer Syed Saba Karim Revealed How MS Dhoni entered into Indian Cricket Team

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படமே அவர் எப்படி இந்திய அணியில் இடம் பெற்றார் என்று காட்டப்பட்டுள்ளது. எனினும், சபா கரீம் சில தெரியாத விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார்.  இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரஞ்சி டிராபியில் தான் தோனியை முதல் முறையாக பார்த்ததாக குறிப்பிட்டார். அப்போது தோனி பேட்டிங் ஆடிய விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார்.

அதிரடி ஆட்டம் காட்டிய ரியான் பராக்; தியோதர் டிராபியை கைப்பற்றிய தெற்கு மண்டலம்!

விக்கெட் கீப்பராக தோனி சில தவறுகளை செய்தார். அப்போது அதனை சுட்டிக் காட்டினேன். இந்திய அணிக்குள் தோனி வருவதற்கு கென்யாவில் நடந்த முத்தரப்பு தொடர் காரணமாக இருந்தது. இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, கென்யா ஏ ஆகிய அணிகள் பங்கு பெற்ற அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில் விக்கெட் கீப்பராக முதலில் தினேஷ் கார்த்திக் தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் இந்திய தேசிய அணியில் இடம் பெற்றதால், அவருக்குப் பதிலாக தோனி அந்த தொடரில் இடம் பெற்றதாக சபா கரீம் கூறினார்.

இந்திய அணிக்கு 5 சதவிகிதமும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதமும் அபராதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios