Asianet News TamilAsianet News Tamil

NED vs PAK: ஃபகர் ஜமான் சதம், பாபர் அசாம் அரைசதம், ஷதாப் கான் காட்டடி ஃபினிஷிங்! நெதர்லாந்துக்கு கடின இலக்கு

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 314 ரன்களை குவித்து, 315 ரன்கள் என்ற கடினமான இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

fakhar zaman century and babar azam fifty help pakistan to set tough target to netherlands
Author
Chennai, First Published Aug 16, 2022, 7:07 PM IST

பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

இதையும் படிங்க - இப்படியே போய்கிட்டு இருந்தால் ஒருநாள் கிரிக்கெட் அழிந்துவிடும்..! ஐசிசி-யை அலர்ட் செய்யும் கபில் தேவ்

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 19 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஜமான் அடித்து ஆட, அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாமும் சிறப்பாக பேட்டிங் ஆடினார்.

அதிரடியாக ஆடிய ஃபகர் ஜமான் சதமடிக்க, பாபர் அசாம் அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 168 ரன்களை குவித்தனர். ஃபகர் ஜமான் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

அதன்பின்னர் பின்வரிசையில் ஷதாப் கான் அடித்து ஆடி 28 பந்தில் 48 ரன்களை விளாசி சிறப்பாக முடித்துக்கொடுக்க, 50 ஓவரில் 314 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 315 ரன்களை நெதர்லாந்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios