Ashes Test Series 2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களத்தில் இறங்கிய இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

England Won the Toss and Choose  to bat first against Australia in Ashes 2023 at Birmingham

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரில் 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 6 முறை ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்துள்ளது.

ரோகித் சர்மாவிற்குப் பதிலாக கேப்டனாகும் அஜிங்கியா ரஹானே?

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயான், ஜோஸ் ஹசல்வுட், ஸ்காட் போலண்ட்.

லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து:

பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்ஸன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பு!

கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. ஆனால், இங்கிலாந்தில் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை கைப்பற்றியது கிடையாது. தற்போது இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்

ஆண்டர்சன் தனது 180 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவர் இன்னும் 15 விக்கெட்டுகள் கைப்பற்றினால், 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். ஆஸ்திரேலியா, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றி அனைத்து ஐசிசி டிராபிகளையும் கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

5 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன்; புனேரி பாப்பா டீம் வெற்றி!

அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் விளையாடுகிறது. தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தற்போது பர்மிங்காமில் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் ஆடி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios