ஆஸ்திரேலியாவுக்கு 174 ரன்கள், இங்கிலாந்துக்கு 7 விக்கெட் – யாருக்கு முதல் வெற்றி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 273 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தார்.
இதில் ஜோ ரூட் 118 (நாட் அவுட்), ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களும், ஜாக் கிராவ்லி 61 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை ஆடியது.. இதில் டிராவிஸ் ஹெட் 50 ரன்களும், அலெக்ஸ் கேரி 66 ரன்களும், கேமரூன் க்ரீன் 38 ரன்களும் எடுத்தனர். ஆஷஸ் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்த உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்க இங்கிலாந்து வீரர்கள் போராடினர்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடந்த அற்புதங்களின் பட்டியல்!
ஒரு கட்டத்தில் எல்லா பீல்டர்களும் 30 யார்ட்ஸ் சர்க்கிளுக்குள்ளாக நிற்க வைத்து கிளீன் போல்டாக்கினார். கடைசியாக அவர் 141 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆஸ்திரேலியா அணி அதிக ரன்கள் குவிக்க தனி ஒருவனாக போராடினார். இந்தப் போட்டியில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆண்டர்சன் தனது 1100ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆளாளுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!
இறுதியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், ஜோ ரூட் 46 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், ஹாரி ப்ரூக் 46 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
சேப்பாக்கம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? சாய் சுதர்சன் சதம் அடிப்பாரா? லைகா கோவை கிங்ஸ் பீல்டிங்!
இதன் மூலமாக ஆஸ்திரேலியா 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 4ஆவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 34 ரன்னுடனும், ஸ்காட் போலண்ட் 13 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை. ஆனால், இங்கிலாந்து வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.