பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 50 ரன்கள் முன்னிலை பெற்றது. 50 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்துள்ளது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டி மற்றும் முல்தானில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷாஃபிக், ஷான் மசூத், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது.
IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!
இங்கிலாந்து அணி:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஆலி ராபின்சன், மார்க் உட், ஜாக் லீச்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில், தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும் அசார் அலி 45 ரன்கள் அடித்தார். சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும், அகா சல்மான் 56 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 304 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 26 ரன்கள் அடித்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஆலி போப் 51 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய ஹாரி ப்ரூக் சதமடித்தார். ப்ரூக் 111 ரன்களையும், பென் ஃபோக்ஸ் 64 ரன்களையும் குவிக்க, பின்வரிசையில் மார்க் உட் (35) மற்றும் ராபின்சன் (29) ஆகிய இருவரும் சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 354 ரன்களை குவித்தது.
ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்
முதல் இன்னிங்ஸில் முடிவில் இங்கிலாந்து அணி 50 ரன்கள் முன்னிலை பெற்றது. 50 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்துள்ளது.
