ENG vs PAK: இங்கிலாந்து 300 எடுத்தால் பாகிஸ்தான் 6.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் – இங்கிலாந்து பேட்டிங்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமானால், இங்கிலாந்து அதிகபட்சமாக 300 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் அதனை 6.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். 200 ரன்கள் என்றால் 4.3 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடந்து வரும் முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு – ஸ்கோர்போர்டில் காட்டப்பட்ட 11.11.11, 11.11. 111 ரன்கள் தேவை!
இதே போன்று பாகிஸ்தான் அணியில் ஹசன் அலிக்குப் பதிலாக ஷதாப் கான் அணியில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு இந்தப் போட்டி மிக முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தால், உலகக் கோப்பை தொடரிலிருந்து கடைசி அணியாக வெளியேறும். இங்கிலாந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் வரும் 2025 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும்.
துபாயில் நடந்த முதல் ஆசிய அரை மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை!
இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறாது. மாறாக, இங்கிலாந்து தோல்வி அடைந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றால் வங்கதேச அணி தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை – டி20 உலகக் கோப்பை சிக்ஸர் குறித்து மனம் திறந்த கோலி!
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷீத்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், ஃபகர் ஜமான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், ஷதாப் கான், ஷாகீன் அஃப்ரிடி, முகமது வசீம் ஜூனியர், ஹரீஷ் ராஃப்