வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு – ஸ்கோர்போர்டில் காட்டப்பட்ட 11.11.11, 11.11. 111 ரன்கள் தேவை!
கிரிக்கெட் எண்களின் விளையாட்டாக இருக்கும் நிலையில் தற்செயல் நிகழ்வுகளை உருவாக்க முடியும், அவற்றில் சில வித்தியாசமானவை. அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி நடந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 2 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டி20 தொடர் 1-1 என்று டிராவில் முடிந்தது. ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது.
துபாயில் நடந்த முதல் ஆசிய அரை மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை!
கேப் டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 236 ரன்கள் தேவைப்பட்டது. 3 ஆம் நாளின் போது தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 3 ஆம் நாளில் தான் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதில், 3ஆம் நாளன்று காலை 11.11 மணிக்கு தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 111 ரன்கள் தேவைப்பட்டுள்ளது.
அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை – டி20 உலகக் கோப்பை சிக்ஸர் குறித்து மனம் திறந்த கோலி!
அந்த நிமிடம் பார்வையாளர்களும் நடுவர் இயன் கோல்டும் ஒற்றைக் காலில் நின்றிருந்தனர். எல்லா நேரத்திலும் ஸ்கோர்போர்டு 11:11 11/11/11 ஆக இருந்தது. இது எவ்வளவு தற்செயல் நிகழ்வு? விளையாட்டில் உண்மையிலேயே ஒரு அரிய தருணம். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து இன்றுடன் 12ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ரெஸ்ட் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு!