Ben Stokes:என்னால நம்ப முடியல, பேட்ட கீழ போட்டு ஷாக்கான பென் ஸ்டோக்ஸ் – 13ஆவது முறையாக பும்ரா வேகத்தில் அவுட்!

இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பும்ரா வேகத்தில் கிளீன் போல்டாகி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

England captain Ben Stokes is clean bowled by Indin pacer Jasprit Bumrah in 2nd Test Match at Visakhapatnam rsk

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி பேட்டிங்கால் இந்தியா 396 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 209 ரன்கள் குவித்தார். பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Sri Lanka vs Afghanistan Test: இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நிறுத்தம்: ஏன் தெரியுமா?

பென் டக்கெட் 21 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ஆலி போப் ஆரம்பம் முதலே திணறிய நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் யார்க்கர் வேகத்தில் கிளீன் போல்டானார். ஜோ ரூட் 5 ரன்களில் வெளியேறினார். ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களில் வெளியேறினார்.

 

 

பென் ஃபோக்ஸ் 6, ரெஹான் அகமது 6 என்று ஒவ்வொரு வரும் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து வந்தார். ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து எப்படி இப்படி நடந்தது என்பது போன்று பேட்டை கீழே போட்டு இரண்டு கையையும் விரித்து ஷாக்கானது போன்று ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரையிறுதியில் இந்தியா அண்டர் 19 – வெற்றிக்கு வித்திட்ட உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே!

மேலும், இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா 13ஆவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலும் பும்ரா வேகத்தில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதோடு, அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

அம்மாவாக இருந்த மாமியார் மறைவு – அவசர அவசரமாக கான்பூர் சென்ற சுனில் கவாஸ்கர்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios