இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பல்லி குறுக்கிட்டதால் போட்டியானது நிறுத்தப்பட்டது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் ஒரேயொரு டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் முதலில் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் குவித்தது.
அரையிறுதியில் இந்தியா அண்டர் 19 – வெற்றிக்கு வித்திட்ட உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே!
இதையடுத்து, இலங்கை முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் நிஷான் மதுஷங்கா மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்கள் குவித்தனர். நிஷான் மதுஷங்கா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு திமுத் கருணாரத்னே 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, வந்த குசால் மெண்டிஸ் 10 ரன்களில் வெளியேறினார்.
அம்மாவாக இருந்த மாமியார் மறைவு – அவசர அவசரமாக கான்பூர் சென்ற சுனில் கவாஸ்கர்!
அதன் பிறகு ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். போட்டியின் 47.2 ஆவது ஓவரின் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்த போது மைதானத்திற்குள் பெரிய அளவிலான ஊர்வன இனத்தைச் சேர்ந்த பல்லி ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதன் காரணமாக, போட்டியானது நிறுத்தப்பட்டது.
19 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 209 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - இந்தியா 396 ரன்கள் குவிப்பு!
