அம்மாவாக இருந்த மாமியார் மறைவு – அவசர அவசரமாக கான்பூர் சென்ற சுனில் கவாஸ்கர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரின் மாமியார் திடீரென்று உயிரிழந்த நிலையில் வர்ணனனையிலிருந்து பாதியிலேயே கிளம்பியிருக்கிறார்.

Cricket Commentator Sunil Gavaskar mother in law Pushpa Mehrotra passed away at Kanpur rsk

கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் சுனில் கவாஸ்கர். இந்திய அணியின் கேப்டனாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 125 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்கள் குவித்துள்ளார். இதில், 34 சதங்களும், 45 அரைசதங்களும் அடித்துள்ளார்.

19 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 209 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - இந்தியா 396 ரன்கள் குவிப்பு!

கடந்த 80 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 236* ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக திகழ்கிறார். இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

Yashasvi Jaiswal Double Century: டெஸ்ட் கிரிக்கெட் - இரட்டை சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை!

அதில், தனது தாயாக நினைக்கும் அவரது மாமியார் இறந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக வர்ணனையை நிறுத்திவிட்டு விசாகப்பட்டினத்திலிருந்து கான்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த 1974 ஆம் ஆண்டு கான்பூரைச் சேர்ந்த மார்ஷ்நெயில் என்ற பெண்ணை கவாஸ்கர் திருமணம் செய்து கொண்டார்.

Tamil Thalaivas: 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் – பிளே ஆஃப் கிடைக்குமா?

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட மார்ஷ்நெயில், சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த போது அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய கவாஸ்கர் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சுனில் கவாஸ்கருக்கு அவரது மாமியார் பக்க பலமாக இருந்திருக்கிறார். ஆதலால் தான் அவரை மற்றொரு தாயாக நினைத்திருக்கிறார். அவரது மாமியார் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios