Asianet News TamilAsianet News Tamil

Yashasvi Jaiswal Double Century: டெஸ்ட் கிரிக்கெட் - இரட்டை சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெஸ்வால் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Yashasvi Jaiswal Hit His Maiden Double Century against England in 2nd Test Match at Visakhapatnam rsk
Author
First Published Feb 3, 2024, 10:48 AM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்திருந்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 257 பந்துகளில் 17 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 179 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Tamil Thalaivas: 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் – பிளே ஆஃப் கிடைக்குமா?

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், அஸ்வின் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து குல்தீப் யாதவ் களமிறங்கி விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 151 பந்துகளில் தனது 2ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். மேலும், சொந்த மண்ணில் முதல் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி வந்த அவர் 150 ரன்களை கடந்தார். முதல் நாள் முடிவில் 179 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2ஆவது நாளான இன்று கூடுதலாக 21 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

India vs England 1st Test Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பான் சதம் – இந்தியா 336 ரன்கள் குவிப்பு!

ஜெய்ஸ்வால் 191 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 197 ரன்கள் கடந்தார். அதன் பிறகு பவுண்டரி அடிக்க 201 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார். அவர், 277 பந்துகளில் 201 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக சொந்த மண்ணில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக வினோத் காம்ப்ளி 21 வயது 35 நாட்களில் இங்கிலாந்து அணிக்க் எதிராக 224 ரன்கள் குவித்தார்.

பேருக்கு மட்டும் எடுத்து வச்ச டீம் இந்தியா, சர்ஃப்ராஸ் கானை ஏன் சேர்க்கவில்லை?

மேலும், மற்றொரு போட்டியில் 21 வயது 55 நாட்களில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 227 ரன்கள் குவித்தார். சுனில் கவாஸ்கர் 21 வயது 283 நாட்களில் 220 ரன்கள் குவித்தார். தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 வயது 37 நாட்களில் 201* ரன்கள் குவித்துள்ளார்.

ஒரு இடது கை பேட்ஸ்மேனாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள்:

சவுரவ் கங்குலி - 239 ரன்கள்

வினோத் காம்ப்ளி – 227 ரன்கள்

வினோத் காம்ப்ளி – 224 ரன்கள்

கவுதம் காம்பீர் – 206 ரன்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 201* ரன்கள்

சிக்ஸர் அடித்து சதம் – சொந்த மண்ணில் முதல் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!

மேலும் குறைவான இன்னிங்ஸ் விளையாடி இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். கருண் நாயர் 3, வினோத் காம்ப்ளி 4, சுனில் கவாஸ்கர் மற்றும் மாயங்க் அகர்வால் 8, சட்டேஷ்வர் புஜாரா 9 மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 இன்னிங்ஸ் விளையாடி இரட்டை சதம் விளாசியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், கருண் நாயர், வினோத் காம்ப்ளி, சட்டேஷ்வர் புஜாரா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios