Asianet News TamilAsianet News Tamil

PAK vs ENG: முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

england beat pakistan by 74 runs in first test and lead the series by 1 0
Author
First Published Dec 5, 2022, 5:38 PM IST

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், வில் ஜாக்ஸ், ஜாக் லீச், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது அலி, ஜாஹித் மஹ்மூத்.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜாக் க்ராவ்லி (122), பென் டக்கெட் (107), ஆலி போப்(108) மற்றும் ஹாரி ப்ரூக் (153) ஆகிய 4 வீரர்கள் அடித்த அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. முதல் நாள் ஆட்டத்தில் 506 ரன்களை குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை இங்கிலாந்து அணி படைத்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாஃபிக் (114), இமாம் உல் ஹக் (121) மற்றும் பாபர் அசாம் (136) ஆகிய மூவரும் அபாரமாக ஆடி சதமடிக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களை குவித்தது.

78 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஜாக் க்ராவ்லி(50), ஜோ ரூட் (73) மற்றும் ஹாரி ப்ரூக்(87) ஆகிய மூவரும் அரைசதம் அடிக்க, 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. 

மொத்தமாக இங்கிலாந்து அணி 342 ரன்கள் முன்னிலை பெற, 343 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (48), அசார் அலி (40), முகமது ரிஸ்வான்(46) ஆகியோருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அந்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டனர். சௌத் ஷகீல் மட்டுமே நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, 268 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது.

ஹர்திக் பாண்டியாவை விட இந்திய அணியின் கேப்டன்சிக்கு தகுதியான வீரர் அவர் தான்..! முன்னாள் வீரர் அதிரடி

74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios