டி20 உலக கோப்பை: மிக முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
டி20 உலக கோப்பையில் க்ரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேவேளையில், சுவாரஸ்யமான கட்டத்திலும் உள்ளது. க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
ஆனால் இங்கிலாந்து - இலங்கை இடையேயான நாளைய போட்டியில் இங்கிலாந்து ஜெயித்தால் 7 புள்ளிகளை பெற்று நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும். அதேவேளையில் இலங்கை ஜெயித்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
டி20 உலக கோப்பை: இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் குடுமி..! புள்ளி பட்டியல் அப்டேட்
இங்கிலாந்து - இலங்கை இடையேயான இந்த முக்கியமான போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டி சிட்னியில் நடப்பதால், இலங்கையை குறைத்து மதிப்பிட்டு, இங்கிலாந்து கண்டிப்பாக ஜெயித்துவிடும் என்று கூறமுடியாது. ஆஸ்திரேலியாவில் சிட்னி ஆடுகளம் மட்டுமே துணைக்கண்ட ஆடுகளங்களை போல ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பாக இருக்கும். எனவே மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா என தரமான ஸ்பின்னர்களை பெற்றுள்ள இலங்கை அணி சிட்னியில் கண்டிப்பாக இங்கிலாந்துக்கு கடும் சவாலளிக்கும். இங்கிலாந்து அணிக்கு இது கடும் சவாலான போட்டியாக இருக்கும்.
வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பை இலங்கையால் கெடுக்க முடியும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், மார்க் உட்.
டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டிய ரஷீத் கான்.. போராடி வென்ற ஆஸ்திரேலியா..!
உத்தேச இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.