Asianet News TamilAsianet News Tamil

SA20: டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை!

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் 2ஆவது போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

Durban Super Giants and Joburg Super Kings fight today in SA20 2nd match
Author
First Published Jan 11, 2023, 4:46 PM IST

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டி வரும் பிப்ரவரி 11 வரை நடக்கிறது. நேற்று கேப்டவுனில் நடந்த போட்டியில் எம்.ஐ கேப்டவுன் அணியும், பார்ல் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, எளிய இலக்கை துரத்திய எம் ஐ கேப்டவுன் அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SA20: முதல் போட்டியிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம் ஐ கேப்டவுன்!

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் 20 தொடரின் 2ஆவது போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டர்பன் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 10 போட்டிகளில் விளையாட வேண்டும். இதில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் டீம்:

குயிண்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜான்சன் சார்ல்ஸ், கிறிஸ்டியன் ஜோன்கர், ஹென்றிச் கிளாசன், வியான் முல்டர், கலே மயர்ஸ், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், கேமா பால், ஹார்டஸ் வில்ஜோயன், ஜூனியர் டாலா, மேத்யூ பிரீட்ஸ்கி, தில்சன் மதுஷங்கா, சிமோன் ஹார்மர், ரீஸ் டோப்லே, பிரெனெலன் சுப்ராயன், அகிலா தனஞ்செயா

மும்பை 687 எடுத்து டிக்ளேர் - சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்த பிரித்வி ஷா 379 ரன்கள்!

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் டீம்:

பாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ரீசா ஹென்றிக்ஸ், ஜென்மென் மலான், லியூஸ் டு ப்லூய், லெவிஸ் க்ரெகோரி, கைல் வெர்ரென்னி (விக்கெட் கீப்பர்), ரோமாரியோ ஷெப்பர்ட், மலூசி சிபோடோ, ஜார்ஜ் ஹார்டன், அல்சாரி ஜோசப், கலேப் சிலெகா, லிசாட் வில்லியம்ஸ், நன்ட்ரே பர்கெர், கெரால்டு கோட்சீ, ஆரோன் பான்சிகோ, டோனவொன் பெர்ரேரா

HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!

Follow Us:
Download App:
  • android
  • ios