IPL 2023: சேப்பாக்கத்தில் கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டிய நாய் – இது ரெண்டாவது முறை!
லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாய் புகுந்து ஆட்டம் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் திருவிழா நடக்கிறது. அதுவும், 1426 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூரிலிருந்து கூட ஏராளமான ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் உட், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
IPL 2023: ரோகித்துக்கு ஓபனிங்கலாம் செட்டே ஆகாது, மிடில் ஆர்டர் தான் - அனில் கும்ப்ளே அட்வைஸ்!
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், மைதானத்திற்குள் நாய் ஒன்று புகுந்ததால் போட்டி தொடங்குவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. நாயை விரட்ட, மைதானத்தின் பாதுகாவலர்கள் படாதபாடு பட்டுள்ளனர். இங்கிட்டு துரத்தினால், அந்தப் பக்கமா ஓடுது, அந்தப் பக்கம் துரத்தினால் இந்தப் பக்கமா ஓடுது என்று கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டியது. இவ்வளவு ஏன், நடுவர் கூட நாயை துரத்திய சம்பவம் கூட நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: ஒரே மேட்ச் தான், யாருன்னு காட்டிய லக்னோ; பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
இதற்கு முன்னதாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியின் போது மைதானத்திற்குள் நாய் வந்த்து. அதையும் துரத்த பாதுகாவலர்கள் படாதபாடு பட்டனர். மைதானத்திற்குள் நாய் ஆட்டம் காட்டிய வேலையைப் பார்த்து தோனி உள்பட பலரும் வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.