ரூ.20,000 கோடி சொத்து வச்சிருக்கும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? தோனி, கோலி, சச்சின் யாரும் இல்லை!
பரோடா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சமர்ஜித் சிங்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.20000 கோடி ஆகும்.
பொதுவாக பணக்கார கிரிக்கெட் வீரர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் தான். கோலியின் சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். தோனியின் நிகர மதிப்பு ரூ.1040 கோடி ஆகும். ஆனால், இவர்களையும் விட கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருப்பவர் ஒருவர் இருக்கிறார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?
தனது ஃபர்ஸ்ட் டி20, முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய தோனி!
ஆம், அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரோடா அரச குடும்பத்தைச் சேர்ந்த சமர்ஜித் சிங் ரஞ்சித் சிங் கெய்க்வாட். இவரது சொத்து மதிப்பு ரூ.2000 கோடி. பரோடாவின் முன்னாள் ஃபர்ஸ் கிளாஸ் கிரிக்கெட் வீரர். அதோடு, பரோடா கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியும் ஆவார்.
கங்குலி, சச்சின் யாரும் படைக்காத சாதனையை படைத்த தோனி!
கடந்த 1987 – 88ஆம் ஆண்டு 1988 – 89 ஆம் ஆண்டுகளில் நடந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 119 ரன்கள் எடுத்தார். இதில், அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். கடந்த 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி ரஞ்சித் சிங் பிரதாப் சிங் கெய்க்வாட் மற்றும் சுபாங்கினிராஜே ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அவர் டெஹ்ராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் படித்தார்.
ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!
அந்தப் பள்ளியில் உள்ள கிரிக்கெட் மற்றும் கால்பந்து டென்னிஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் அவரது தந்தை இறந்த பிறகு ஜூன் 22ல் லட்சுமி விலாஸ் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி சமர்ஜித் சிங் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார். அவர், தற்போது அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.20,000 கோடி ரூபாய் ஆகும்.
தோனியின் உருவம் பொறித்த புகைப்படத்தை பரிசாக வழங்கிய ரசிகர்: வைரலாகும் புகைப்படம்!
லட்சுமி விலாஸ் அரண்மனை, 600 ஏக்கரில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள், வதோதராவில் உள்ள மோதி பாக் ஸ்டேடியம், மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகம் என்று எல்லாவற்றையும் சமர்ஜித் சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் தனது கட்டுப்பாட்டுள்ள உள்ளது. மேலும், ரவி வர்மாவின் அழகிய ஓவியங்கள், தங்கம், வெள்ளி, வைரம், ராஜ பரம்பரை நகைகள், அசையும் சொத்துக்களையும் வைத்துள்ளார். இவற்றின் மொத்த நிகர மதிப்பு மட்டும் ரூ.20000 கோடி ஆகும்.
2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?