பணம் சம்பாதிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.91 கோடி ஆகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, வருங்கால இந்திய அணியை வழிநடத்த தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் சொல்லும் அளவிற்கு இந்திய அணிக்கு பங்களித்து வருகிறார்.
MI வீரர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த திலக் வர்மா – வைரலாகும் வீடியோ!
இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவதைப் பொறுத்து டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை சிறப்பாக வழிநடத்தி வெற்றியின் விளிம்பு வரை சென்ற ரோகித் சர்மா மீண்டும் டி20 தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஆதலால், அவர் அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக தனது முதல் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு மட்டும் மார்ச் மாதம் 2024 ஆம் ஆண்டின்படி ரூ. 91 கோடி. ஹர்திக் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.2 கோடி சம்பாதிக்கிறார். இது அவர் முன்பு சம்பாதித்ததை விட அதிகம். அவர் பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ஆண்டுக்கு ரூ.5 கோடி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தோல்வி, இதுல அபராதம் வேறயா? சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?
ஐபிஎல் வருமானம்:
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.15 கோடிக்கு இடம் பெற்று விளையாடிய ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அதே தொகை கொடுத்து வாங்கியது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வருகிறார்.
கிரிக்கெட் தவிர, பிராண்ட் ஒப்பந்தம் மூலமாக ஹர்திக் பாண்டியா கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனானது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் பிராண்ட் ஒப்பந்தம் 30 முதல் 40 சதவிகிதம் அதிகரித்தன. வில்லியன், ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் சில்வர் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
பணம் சம்பாதிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, Aretoo மற்றும் LendenClub போன்ற ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்திருக்கிறார். இந்த ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் மூலமாக, இது எதிர்காலத்தில் அவருக்கு அதிகளவில் வருமானம் வருமாம்.
குஜராத்தின் வதோதராவில் உள்ள பென்ட் ஹவுஸில் தனது குடும்பத்துடன் ஹர்திக் பாண்டியா வசித்து வருகிறார். அண்மையில் மும்பையில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான சொகுசு வீட்டை வாங்கியிருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது. கிரிக்கெட் பிரபலங்கள் ஏராளமான கார்களை வைத்திருக்கின்றனர். அதே போன்று தான் ஹர்திக் பாண்டியாவும் ஆடி ஏ6, லம்போர்கினி ஹூராக்கன் EVO உள்ளிட்ட கார்களை வைத்திருக்கிறார்.