ஏற்கனவே தோல்வி, இதுல அபராதம் வேறயா? சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Gujarat Titans Captain Shubman Gill Becomes the 1st Captain to be Fined Rs 12 lakhs for Slow Over Rate in IPL 2024 against Chennai Super Kings Match rsk

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 7ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பேட்டிங் செய்வதாக சொல்லிவிட்டு பின்னர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அதிரடியாக விளையாடி 206 ரன்கள் குவித்தது. தனது ஹோம் மைதானத்து 168 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிடி அணி வீரர்கள் சிஎஸ்கே அணியை 200 ரன்களுக்கு மேல் அடிக்க வைத்துவிட்டனர்.

பின்னர், 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தீபக் சாகர் வீசிய பந்து விருத்திமான் சகா ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அடுத்த பந்திலேயே சகா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 12 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 12 ரன்கள் மட்டுமே அடித்து டேரில் மிட்செல் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த டேவிட் மில்லர் 21 ரன்களில் வெளியேற, அஸ்மதுல்லா உமர்சாய் 11, ராகுல் திவேதியா 6, ரஷீத் கான் 1 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக வீரர் சாய் சுதர்சன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். ஆனால், அவர், 31 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. குஜராத் அணியை பொறுத்த வரையில் மொத்தமே 3 சிக்ஸர் மட்டுமே அடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டை விட மோசமாக விளையாடிய குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே ஹோம் மைதானத்தில் 2ஆவது வெற்றியை பெற்றுள்ளது. அதோடு, இதுவரையில் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மஞ்சள் பாய்ஸ் மாற்றி எழுதியுள்ளனர்.

இந்த போட்டி உள்பட இரு அணிகளும் மோதிய 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேரில் மிட்செல் மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டி20ஐ பொறுத்த வரையில் ஒரு மணி நேரத்திம் 25 நிமிடத்திற்குள்ளாக 20 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலாக சென்றால் ஸ்லோ ஓவர் ரேட் விதிப்படி 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்குள் வெளியில் நிற்பது அனுமதி அளிக்கப்படும்.

மேலும் முதலில் கேப்டனுக்கு போட்டி சம்பத்திலிருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் இதே போன்று தவறுகள் நடந்தால் கேப்டன் உள்பட மற்ற வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios