விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் தற்போது 6 போட்டிகளில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு மாறாக பா11சி திருச்சி அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வி அடைந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய 23 ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.
இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் அருண் கார்த்திக் 39 ரன்களும், என் எஸ் ஹரிஷ் 34 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் விமல் குமார் மற்றும் சிவம் சிங் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் சேர்த்தனர். விமல் குமார் அதிரடியாக ஆடி 62 சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சிவம் சிங்கும் 51 ரன்களில் வெளியேற, ஆதித்யா கணேஷ் 13 ரன்களும், சுபோத் பதி 10 ரன்களும், பாபா இந்திரஜித் 8 ரன்களும் எடுக்கவே திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!
இந்த வெற்றியின் மூலமாக டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதே போன்று இன்றைய போட்டியில் தோற்று இருந்தாலும் 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டுயலில் 3ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக சென்றுள்ளது.