டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள துருவ் ஜூரெல், இந்திய அணியின் கேப் அணியும் வாய்ப்பு கிடைத்தால் இதைத் தான் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். இதில், விராட் கோலி தனிப்பட்ட காரணம் தொடர்பாக இடம் பெறவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகினார். மேலும், கேஎல் ராகுல் உடல் தகுதி எட்டாத நிலையில், 3ஆவது போட்டியிலிருந்து விலகினார்.
ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், துருவ் ஜூரெல் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள துருவ் ஜூரெல், பயிற்சி செஷனின் போது நடந்த உரையாடலில் தனது தந்தை தான் தனது ஹீரோ. இந்திய அணியின் கேப் அணியும் வாய்ப்பு கிடைத்தால் அதனை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.
பிசிசிஐயின் எதிரியுடன் கூட்டணி சேரும் ஸ்ரீனிவாசன் – சிஎஸ்கேக்கு தடையா?
துருவ் ஜூரெலின் கிரிக்கெட் பயணத்திற்கு அவரது குடும்பத்தினர் பல தியாகங்களை செய்துள்ளனர். அவரது கிரிக்கெட் கிட் வாங்குவதற்கு கூட அவரது அம்மா, தனது தங்கச் சங்கிலியை விற்றுக் கொடுத்துள்ளார். ஜூரெல் கிரிக்கெட் விளையாடுவதை அவரது தந்தை முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பிறகு அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், நாளை நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏசியாநெட் நியூஸ் தமிழின் படி, இந்தியாவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்றால், ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்ஃப்ராஸ் கான், ரஜத் படிதார், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஸ்ப்ரித் பும்ரா.
CSK Brand Ambassador: சிஎஸ்கேயின் பிராண்ட் அம்பாசிடராக கத்ரினா கைஃப் ஒப்பந்தம்!
