கிரிக்கெட்டை விட குடும்பம் தான் எனக்கு முக்கியம்; மீண்டும் அசிங்கப்பட தயாரா இல்ல! மனுவை வாபஸ் பெற்றார் வார்னர்

தனக்கு விதிக்கப்பட்ட கேப்டன்சி தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி விண்ணப்பித்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார் டேவிட் வார்னர்.
 

david warner slams cricket australia and withdraws appeal against leadership ban

2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு 2 ஆண்டுகள் கேப்டன்சி செய்ய தடை விதிக்கப்பட்டது. டேவிட் வார்னருக்கு வாழ்நாள் கேப்டன்சி தடை விதிக்கப்பட்டது.

ஸ்மித் கேப்டன்சி தடை முடிந்ததால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயத்தால் ஆடாததால் பொறுப்பு கேப்டனாக ஸ்மித் செயல்படவுள்ளார். ஆனால் வார்னருக்கு வாழ்நாள் தடை நீடிக்கிறது.

காயத்துடன் களமிறங்கிய ரோஹித் அரைசதம்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நன்னடத்தை விதிகளில் மாற்றங்களை கொண்டுவந்தது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். டி20 கிரிக்கெட்டிலும் அவர் பெரிதாக சோபிக்காத நிலையில், அவர் விரைவில் டி20 ஃபார்மட்டிலும் ஓய்வறிவிக்க வாய்ப்புள்ளது.

எனவே வெள்ளைப்பந்து அணிகளின் அடுத்த கேப்டனாக தனக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது என்று நினைத்த டேவிட் வார்னர், தனக்கு விதிக்கப்பட்ட கேப்டன்சி தடையை பரிசீலிக்குமாறு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்து விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்கும் விசாரணை குழுவின் செயல்பாட்டால் அதிருப்தியடைந்த டேவிட் வார்னர், தனது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், கிரிக்கெட்டை விட எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். கேப்டவுன் டெஸ்ட்டில் நடந்த சம்பவத்தால் நான் அவமானங்களை சந்தித்தபோதும், அதற்கு பின் இந்த 5 ஆண்டுகளிலும் என் மனைவி மற்றும் 3 மகள்களும் எனக்கு பெரும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அந்த சம்பவத்திற்கு பின் எனது அணுகுமுறையை மாற்றியிருக்க்கிறேன். அந்த சம்பவம் இந்த 5 ஆண்டுகளில் என்னையும் எனது குடும்பத்தையும் கடுமையாக பாதித்திருக்கிறது. 

அந்த பையன் அணிக்கு திரும்பிவிட்டால் உங்க 2பேரில் ஒருவருக்கு ஆப்பு! ராகுல், ஷ்ரேயாஸ் ஐயரை எச்சரிக்கும் கவாஸ்கர்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நன்னடைத்தை விதிகளை மாற்றியமைத்ததால் எனது கேப்டன்சி தடையை நீக்கக்கோரி விண்ணப்பித்தேன். ஆனால் விசாரணைக்குழு இந்த விவகாரத்தில் மக்கள் கருத்தை கேட்கவுள்ளனர். நானும் என் குடும்பத்தினரும் மீண்டும் அசிங்கப்படுவதை விரும்பவில்லை. கிரிக்கெட் அழுக்கை கழுவ எனது குடும்பம் வாஷிங் மெஷினாக இருக்க விரும்பவில்லை. எனவே கேப்டன்சி தடையை நீக்கக்கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக வார்னர் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios