Asianet News TamilAsianet News Tamil

அந்த பையன் அணிக்கு திரும்பிவிட்டால் உங்க 2பேரில் ஒருவருக்கு ஆப்பு! ராகுல், ஷ்ரேயாஸ் ஐயரை எச்சரிக்கும் கவாஸ்கர்

இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்துவிட்டால், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் இடத்தை இழக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்டி சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
 

sunil gavaskar warning kl rahul and shreyas iyer that if hardik pandya comeback to team india one of them lost place in team
Author
First Published Dec 7, 2022, 5:42 PM IST

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களில் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது. எனவே அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் அழுத்தமும் அதிகரித்திருக்கிறது.

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பைகளில் இந்திய அணி தோற்றதற்கு அணி தேர்வு சரியாக அமையாததும் ஒரு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. எனவே அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு சிறந்த, வலுவான அணியை தேர்வு செய்தாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே ஒவ்வொரு இடத்திற்கான வீரரையும் உறுதி செய்யும் பணியை இந்திய அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது.

இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி மெஹிடி ஹசன் அபார சதம்! இந்தியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்

ரோஹித் சர்மா - தவான் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆடாத வங்கதேச ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் ஆடுகின்றனர். தவான் தொடக்க வீரராக ஆடுவதால் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்துவதால் ஸ்பின் ஆல்ரவுண்டர்  இடம் அவருக்கு உறுதி.

இந்நிலையில், இந்திய அணி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ராகுல் இனி எந்த போட்டியையும் எளிதாக எடுக்கமுடியாது. ஒவ்வொரு போட்டியிலும் ராகுல் ஸ்கோர் செய்தாக வேண்டும். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே நல்ல ஃபீல்டர்கள். ராகுல் விக்கெட் கீப்பிங்கும் செய்வார். ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவார். எனவே 5 மற்றும் 6ம் இடங்களுக்கு இந்த மாதிரியான கடும்போட்டி இருப்பது நல்லதுதான். ஹர்திக் பாண்டியா ஒருநாள் அணிக்கு திரும்பிவிடுவார் என்பதை மறந்துவிடக்கூடாது. அவருக்கு அணியில் நிரந்தரமாக ஒரு இடம் இருக்கிறது என்றார் கவாஸ்கர்.

நான்கரை வருஷத்துக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்

ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால், ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடத்தை இழக்க நேரிடும் என்பதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளார் கவாஸ்கர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios