உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். எப்போதெல்லாம் ஆஸ்திரேலியா அணி இந்தியா வருகிறதோ, அப்போதெல்லாம் விமான நிலையம் முதல் போட்டி முடிந்து திரும்ப செல்லும் வரையில் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டவர். எந்த ஒரு தருணத்திலும் கோபத்தை வெளிக்காட்டாதவர்.
யார் இந்த தாஜி? ரோகித் சர்மாவிற்கும், மனைவி ரித்திகாவிற்கும் தியானம் கற்றுக் கொடுத்த ஆன்மீக குரு!
இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் மீதும் பற்று கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடிய வார்னர், சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்று வாள் சுற்றி காண்பித்தார். புஷ்பா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நடனம் ஆடி காண்பித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படி இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் வார்னர்.
முதல் முறை அல்ல... மகளிர் கிரிக்கெட்டிலும் தோல்விக்குப் பின் தோள் கொடுத்த பிரதமர் மோடி!
நடந்து முடிந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது. உலகக் கோப்பை தொடரில் 9 லீக் போட்டி மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த இந்திய அணி கண்டிப்பான முறையில் டிராபியை கைப்பற்றும் என்று ஒவ்வொரு ரசிகரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.
1983ல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரல் போட்டோ..
ஆனால், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே ஒட்டுமொத்த ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். இதன் காரணமாக, என்னதான் ஒரு ஆஸ்திரேலியா வீரராக இருந்தாலும், இந்திய ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இது ஒரு சிறந்த விளையாட்டு. சூழ்நிலை நம்பமுடியாததாக இருந்தது. இந்தியா உண்மையில் ஒரு தீவிரமாக போராடியது. உங்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சில ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர். அதில், உங்கள் பேட்டிங்கால் எங்களை காயப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் பீல்டிங்கால் எங்கள் பேட்டிங்கை காயப்படுத்தினீர்கள். இது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. வாழ்த்துகள்.. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த அழகான தருணங்களை அனுபவிக்கவும் என்றும், உங்கள் நாட்டிற்காக உலகக் கோப்பையை வென்றதற்காக நீங்கள் எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்றும், நீங்கள் ஒரு சாம்பியனைப் போல விளையாடினீர்கள், யாரையும் மன்னிக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் உங்கள் வேலையைச் செய்கிறீர்கள் என்றும் சிலர் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது வெற்றியை இப்படி கொண்டாடுறாங்க – பார்க்கவே வியப்பாக இருக்கிறது – டிராவிஸ் ஹெட் பெருமிதம்!
