Asianet News TamilAsianet News Tamil

1983ல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரல் போட்டோ..

1983 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளவு எவ்வளவு என்பதைக் காட்டும் புகைப்படத்தை X வலைதளத்தில் பயனர் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

Do you know the salary of Indian cricketers in 1983? Viral photo.. Rya
Author
First Published Nov 21, 2023, 3:41 PM IST | Last Updated Nov 21, 2023, 3:41 PM IST

இந்தியாவில் அரசியல், திரைப்படங்களுக்கு இணையாக விவாதிக்கப்படும் மற்றொரு அம்சம் என்றால் அது கிரிக்கெட் தான்.  ஒரு காலத்தில் ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைக்கப்பட்ட இந்த விளையாட்டு, இந்தியாவில் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

இருப்பினும், இந்தியாவில் கிரிக்கெட்டின் இந்த பரிணாமம் மிகவும் எளிதானது அல்ல. 80 களுக்கு முன்பு, இந்த விளையாட்டு குறைந்த வருவாய் ஈட்டும் துறையாக இருந்தது. இதன் காரணமாக கிரிக்கெட்டைசிறந்த தொழில் தேர்வாக கருதப்படவில்லை. இதனை நிரூபிக்கும் விதமாக 1983 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளவு எவ்வளவு என்பதைக் காட்டும் புகைப்படத்தை X வலைதளத்தில் பயனர் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் படத்தில், அப்போதைய இந்திய கேப்டன் கபில்தேவ்  கட்டணமாக ரூ.1500 மற்றும் தினசரி உதவித்தொகை ரூ.600-ஐப் பெற்றதைக் காணலாம். 1983-ல் கிரிக்கெட் வீரர்கள் இதே கட்டணத்தைப் பெற்றனர்,

Do you know the salary of Indian cricketers in 1983? Viral photo.. Rya

ஆனால் இன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். பிசிசிஐ 'ஆண்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் கிரேடுகளின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களின் வருவாயை நிர்ணயிக்கிறது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான இந்திய கிரிக்கெட் வாரியம், A+, A, B மற்றும் C ஆகிய நான்கு கிரேடுகளில் ஒப்பந்தங்களை வழங்குகிறது. கிரேடு C வீரர்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ. 1 கோடியும், கிரேடு B கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், கிரேடு A கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், வழங்கப்படுகிறது, கிரேடு A+ கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.7 கோடியும் வழங்கப்படுகிறது.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே  A+ கிரேடு ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் போட்டிக் கட்டணம் மற்றும் கணிசமான கொடுப்பனவுகளைப் பெறுகிறார்கள். அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கு ரூ. 6 லட்சம், T20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சம் பெறுகின்றனர்.

கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு இருந்திருந்தால் இந்தியா உலகக் கோப்பையில் வெற்றி பெற்றிருக்கும்: சேத்தன் குமார்!

1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினரான சுனில் வால்சன், உலகக் கோப்பையை வென்ற பிறகு ஒவ்வொரு வீரரும் சுமார் 25,000 ரூபாய் பெற்றதாகக் குறிப்பிட்டார். அப்போது அவர், “இந்தியாவுக்காக விளையாடுவது பெருமைக்குரிய விஷயம் என்பதால், அந்த நேரத்தில் பண வெகுமதி குறிப்பிடத்தக்கதாக இல்லை” என்றார்.

இந்தியா 1983 மற்றும் 2011 இல் இரண்டு முறை ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், 2003 மற்றும் 2023 இல் இரண்டு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios