இந்தியாவிற்கு எதிராக நாங்கள் அடைந்த வெற்றியை வங்கதேசம் இவ்வளவு பிரம்மாண்டமாக கொண்டாடுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது என்று டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சரி, பேட்டிங் தான் சரியில்லை, பவுலிங்கில் இந்திய அணி ஜொலிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக சோபிக்கவில்லை. பவுலர்கள் 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
என் வாழ்க்கையில் அடுத்த சேப்டர் – திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்!
ஆஸ்திரேலியா 2ஆவது பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஆகியோர் இந்திய அணியிடமிருந்து வெற்றியை தட்டிச் சென்றுவிட்டனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் போராடி தோல்வி அடைந்தது. தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இந்திய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியை தனது மனைவி ஜெசிகா டேவிஸிற்கு சமர்ப்பணம் செய்வதாக டிராவிஸ் ஹெட் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு எதிராக நாங்கள் அடைந்த வெற்றியை வங்கதேசம் அதிக எண்ணிக்கையில் கொண்டாடியதை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது என்று வீடியோவை பகிர்ந்து கூறியுள்ளார்.
