IND vs AUS T20 Series: இப்படியொரு சோதனையா? ஒருக்கா அடி வாங்கியதே போதும்: டி20 உலகக் கோப்பைக்கான முதல் முயற்சி!
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2024 ஆம் அண்டு தொடங்க உள்ள நிலையில் அதன் முதல் முயற்சியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசியின் மூலமாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டும் ஒரு சீரிஸ் தான் டி20 உலகக் கோப்பை தொடர். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. தோனி தலைமையிலான இந்திய அணி முதல் டி20 தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு 8 டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. இதில், இந்தியா ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பை கைப்பற்றவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து 2 ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.
இதையடுத்து வரும் ஜூன் 2024 ஆம் ஆண்டு 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன. இதில், 20 அணிகள் இடம் பெறுகின்றன. இதில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 12 அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 8 அணிகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக், மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களின் மூலமாக நடத்தப்படும் போட்டிகளின் அடிப்படையில், 2, 1, 2, 1 மற்றும் 2 என்று அணிகள் தகுதி பெறுகின்றன.
இந்த நிலையில் தான் டி20 தொடருக்கான முதல் சோதனையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடக்கிறது. வரும் 23 ஆம் தேதி தொடங்கும் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் என்று உலகக் கோப்பையில் விளையாடிய பவுலர்கள் இடம் பெறவில்லை. மாறாக, முகேஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று பேட்டிங்கிலும் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிங்கு சிங், இஷான் கிஷான் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி 2 போட்டிகளில் இடம் பெற உள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடர், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை 2023 தொடர்களிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போன்று சீனியர் வீரரான புவனேஷ்வர் குமாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வினி ராமனையும் விட்டு வைக்காத வன்ம கும்பல்... மேக்ஸ்வெல் மனைவியை டார்கெட் செய்து மிரட்டல்!