Asianet News TamilAsianet News Tamil

அம்பாதி ராயுடு மாதிரி சஞ்சு சாம்சனை ஒழிக்க பார்க்குறாங்க! பிசிசிஐ-யின் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தும் கனேரியா

இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்காமல் பிசிசிஐ அரசியல் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விளாசியுள்ளார்.
 

danish kaneria slams bcci and selection committee for denying chances to sanju samson
Author
First Published Nov 30, 2022, 7:26 PM IST

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் ஆட கண் துடைப்புக்காக வாய்ப்பளித்துவிட்டு அவரை மற்ற போட்டிகளில் புறக்கணித்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சு சாம்சன் இயல்பான திறமைசாலி. பெரிய ஷாட்டுகளை அலட்டலின்றி அசால்ட்டாக அடிக்கக்கூடியவர். அதிரடியாக ஆடக்கூடிய சாம்சன், அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி அசத்தும் வீரர். இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் திறமையான பேட்ஸ்மேன் தான் என்றாலும், நிலையான, சீரான ஆட்டத்தை ஆடாததுதான் அவரது பெரிய பிரச்னை. அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் வாய்ப்பளித்துவிட்டு இந்திய அணி நிர்வாகம் மீண்டும் ஒதுக்கிவிடுகிறது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது.

Vijay Hazare: கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய அசாம் அணி போராடி தோல்வி! ஃபைனலில் மகாராஷ்டிரா - சௌராஷ்டிரா மோதல்

2015ம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன் திறமையான வீரராக இருந்தும் கூட, அவருக்கு இன்னும் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தானே, அவரால் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும். தோனி, கோலி, ரோஹித் மாதிரியான நிரந்தர கேப்டன்கள் மட்டுமல்லாது தவான், ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என பொறுப்பு கேப்டன்களின் கேப்டன்சியிலும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறார். கேப்டன்கள் யாராக இருந்தாலும் சாம்சன் புறக்கணிக்கப்படுவது மட்டும் மாறுவதில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்படும் அதேவேளையில் சாம்சன் புறக்கணிக்கப்படுகிறார். நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 38 பந்தில் 36 ரன்கள் அடித்து நன்றாக ஆடினார் சஞ்சு சாம்சன். ஆனால் டி20 தொடரில் 17 ரன்களும், முதல் ஒருநாள் போட்டியில் 23 பந்தில் 15 ரன்களும் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட்டுக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், சாம்சன் உட்காரவைக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியிலும் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களே வருத்தப்படும் அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்நிலையில், பிசிசிஐ-யும் இந்திய அணி நிர்வாகமும் வேண்டுமென்றே சஞ்சு சாம்சனை ஓரங்கட்டுவதாகவும், அவரது கெரியரை முடித்துவைக்கவே இப்படி செய்வதாகவும் கடும் குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

இந்திய அணி தலைமை தேர்வாளருக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர்கள் பட்டியல்..! ரேஸில் இருக்கும் தமிழக வீரர்

இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, அம்பாதி ராயுடுவின் கெரியர் இப்படித்தான் முடித்துவைக்கப்பட்டது. 2019 ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக அம்பாதி ராயுடு அருமையாக ஆடி நிறைய ஸ்கோர் செய்தார். ஆனால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவின் உள்ளடி அரசியல் இது. ஒரு வீரர் எவ்வளவுதான் சகித்துக்கொள்ள முடியும்..? ஏற்கனவே சாம்சன் நிறைய சகித்துவிட்டார். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். சேர்ப்பதும் நீக்குவதுமாக இருப்பதால், ஒரு நல்ல வீரரை நாம் இழக்கப்போகிறோம் என்று டேனிஷ் கனேரியா விளாசியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios