15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஃபைனலில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே!
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற 2ஆவது அணியாக சிஎஸ்கே சாதனை படைத்துள்ளது.
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதில், சாய் சுதர்சன் அதிரடியாக ஆடிய 96 ரன்கள் குவித்தார். விருத்திமான் சகா 54 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!
பின்னர் கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி பேட்டிங் ஆடியது. அப்போது 3ஆவது பந்திலேயே மழை பெய்யத் தொடங்கியது. மழையின் குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக இறுதிப் போட்டி அமைந்தது. இதில், சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதில் டெவான் கான்வே 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!
ருத்துரஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களிலும், ராயுடு 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். கடைசி 4 பந்துகளை யார்க்கராக வீசிய அவர் 5ஆவது பந்தில் யார்க்கராக வீச முயற்சித்து தோல்வி அடைந்தார். அந்தப் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். கடைசியாக ஒரு பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதை லெக்சைடாக வீச, ஜடேஜா லட்டு மாதிரி திருப்பிவிடவே, சிஎஸ்கே அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
வரலாற்றில் முதல் முறையாக 3 நாட்கள் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி!
இதன் மூலமாக கடைசி பந்தில் வெற்றி பெற்ற 2ஆவது அணியாக சிஎஸ்கே புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.