ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பிரார்த்தனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் வரும் மார்ச் 22 ஆம் தேதி 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில் ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலேயும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி தீவிரமாக ஜிம் உடற்பயிற்சி, பேட்டிங், டென்னிஸ் என்று பல வகைகளில் தன்னை மெருகேற்றி வருகிறார்.

TNPL Auction 2024: கடந்த ஆண்டை விட ரூ.4.4 லட்சம் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட சஞ்சய் யாதவ்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேரில் மிட்செல் ரூ.14 கோடி, சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடி, ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடி, முஷ்தாபிஜூர் ரஹ்மான் ரூ.2 கோடி, ரச்சின் ரவீந்திரா ரூ.1.80 கோடி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி ரூ.20 லட்சம் என்று ஏலம் எடுக்கப்பட்டனர்.

TNPL Auction 2024: டிஎன்பிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சாய் கிஷோர்!

இந்த நிலையில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.தோனி சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தோனி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPL 2024 Auction: டிஎன்பிஎல் ஏலம் – ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொகை வச்சிருக்கு?

Scroll to load tweet…