IPL 2023: டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது சிஎஸ்கே

டெல்லி கேபிடள்ஸை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியது.
 

csk beat delhi capitals by 77 runs and qualifies to play offs of ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது. எஞ்சிய 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், டெல்லி கேபிடள்ஸை இன்று வீழ்த்தி 2வது அணியாக சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

இன்று டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்த சிஎஸ்கே -  டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.

IPL 2023: தோனி 8ம் வரிசையில் இறங்குவது ஏன்..? உண்மையை உடைத்த மைக் ஹசி

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, யஷ் துல், அமான் கான், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 14.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை குவித்து கொடுத்தனர். 50 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து ருதுராஜ் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார்.

அதன்பின்னர் டெவான் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே, 9 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி 52 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்த டெவான் கான்வேவும் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழக்க, ஜடேஜா 7 பந்தில் 20 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 223 ரன்களை குவித்தது சிஎஸ்கே. 

224 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான டேவிட் வார்னர் ஒருமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் மளமளவென சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தனி நபராக நின்று ஆடிய வார்னர் 58 பந்தில் 86 ரன்கள் அடித்து 19வது ஒவரில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது டெல்லி அணி.

IPL 2023: ஐபிஎல்லில் அசத்திய இந்த 3 வீரர்களையும் ODI உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கணும் - ரவி சாஸ்திரி

77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 2வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது. 17 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி நல்ல நெட் ரன்ரேட்டுடன் 2ம் இடத்தில் உள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios