IPL 2023: வாழ்வா சாவா போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளும் சிஎஸ்கே.! அணி காம்பினேஷனின் என்னென்ன மாற்றம்.?

ஐபிஎல் 16வது சீசனில் வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே அணி அதன் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளும் நிலையில் அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

csk and delhi c apitals probable playing eleven for important match in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. இன்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவரும் நிலையில், இதற்கு பிறகு வெறும் 4 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

லீக் சுற்று முடிவடையவுள்ள நிலையில், இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இந்த அனைத்து அணிகளுமே கடைசி லீக் போட்டியில் ஜெயித்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளன.

இவற்றில் லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள், ஆர்சிபி மற்றும் மும்பையை விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்றிருப்பது அந்த அணிகளுக்கு பலம். ஆர்சிபி அணியின் நெட் ரன்ரேட் மும்பையை விட அதிகமிருப்பதால் கடைசி போட்டியில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் 2 அணிகளுமே ஜெயித்தாலும், லக்னோ, சிஎஸ்கே அணிகள் அவற்றின் கடைசி போட்டிகளில் ஜெயிக்கும் பட்சத்தில் ஆர்சிபி உள்ளே நுழைந்துவிடும். மும்பை இந்தியன்ஸ் வெளியேற நேரிடும்.

IPL 2023: சீசனின் பாதியில் ஓடிய ஆர்ச்சருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது..! கவாஸ்கர் கடும் விளாசல்

எனவே அனைத்து அணிகளுக்குமே கடைசி போட்டி மிக முக்கியம். சிஎஸ்கே அணி கண்டிப்பாக ஜெயித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் அதன் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. இந்த தொடரை வெளியேறிவிட்ட டெல்லி அணிக்கு இனி இழப்பதற்கு எதுவுமில்லை. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.

கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் சிஎஸ்கே அணி இறங்குகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. தங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் சிஎஸ்கே அணி பொதுவாகவே ஆடும் லெவனில் மாற்றங்களை செய்ய விரும்பாது என்பதால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.

ICC WTC ஃபைனல்: பெஸ்ட் ஃபார்முக்கு வந்த விராட் கோலி.. ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, அக்ஸர் படேல், அமான் கான், யஷ் துல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios