Asianet News TamilAsianet News Tamil

Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணி வீரர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

Cricket World Cup 2023 All Teams Squad Full List rsk
Author
First Published Sep 30, 2023, 11:03 AM IST

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன்னும் 4 நாட்களில் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் நடப்பி சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!

உலகக் கோப்பை 2023 லீக் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

10 அணிகள்:

இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா.

10 மைதானங்கள்:

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா.

வார்ம் அப் போட்டிகள்:

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக செம்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் நடத்தப்படுகிறது.

தேதி அணி 1 அணி 2 இடம் நேரம்
செப்டம்பர் 29 வங்கதேசம் இலங்கை கவுகாத்தி 2 மணி
செப்டம்பர் 29 தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் திருவனந்தபுரம் 2 மணி
செப்டம்பர் 29 நியூசிலாந்து பாகிஸ்தான் ஹைதராபாத் 2 மணி
செப்டம்பர் 30 இந்தியா இங்கிலாந்து கவுகாத்தி 2 மணி
செப்டம்பர் 30 ஆஸ்திரேலியா நெதர்லாந்து திருவனந்தபுரம் 2 மணி
அக்டோபர் 02 நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா திருவனந்தபுரம் 2 மணி
அக். 02 இங்கிலாந்து வங்கதேசம் கவுகாத்தி 2 மணி
அக். 03 ஆப்கானிஸ்தான் இலங்கை கவுகாத்தி 2 மணி
அக். 03 இந்தியா நெதர்லாந்து திருவனந்தபுரம்  2 மணி
அக். 03 பாகிஸ்தான் ஆஸ்திரேலியா ஹைதராபாத் 2 மணி

வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: 23ம் ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை அறிவித்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கடைசி நேரத்தில் தங்களது வீரர்களை அறிவித்தனர். மேலும், இந்திய அணியில் இதுவரையில் தங்களது அணி வீரர்களை அறிவிக்கவில்லை. எனினும், இதுவரையில் அறிவிக்கப்பட்ட அணி வீரர்களை உறுதி செய்ய அல்லது மாற்ற 28 ஆம் தேதிக்குள்ளாக கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சில அணிகளில் காயம் காரணமாக வீரர்கள் விலகியதைத் தொடர்ந்து மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஸ் இங்கிலிஸ், சீன் அபாட், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஷ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல்,  மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இங்கிலாந்து:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், ஹாரி ப்ரூக்.

IND vs AUS: அக்‌ஷர் போன்று வாஷிங்டன் சுந்தருக்கு நடந்து விட்டால் எனன் செயவது? ரோகித் எடுத்த அதிரடி முடிவு!

நியூசிலாந்து:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, டிம் சவுதி, மார்க் சாப்மேன், லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம் (துணை கேப்டன்), மிட்செல் சாண்ட்னர், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங்.

தென் ஆப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ்,  எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கஜிகோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸிவ் வான் டெர் டுசென், லிசாட் வில்லியம்ஸ், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ

World Cup 2023: அமிதாப் பச்சன், சச்சினைத் தொடர்ந்து ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய் ஷா!

ஆப்கானிஸ்தான்:

ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜ்புல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபாரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

நெதர்லாந்து:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகர், ஷாரிஸ் அகமது, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

இலங்கை:

தசுன் ஷனாகா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்/ துணை கேப்டன்), பதும் நிசாங்கா, குசால் ஜனித், திமுத் கருணாரத்னே, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, துனித் வெல்லலகே, கசுன் ரஜிதா, மதீஷ் பதிரனா, லகிரு குமாரா, மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷங்கா, துஷான் ஹேமந்தா, 

சமிகா கருணாரத்னே – Travelling reserve

பாகிஸ்தான்:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாஃபிக்,  முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், உசாமா மிர், முகமது நவாஸ், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப், முகமது வாசீம், ஹசன் அலி.

வங்கதேசம்:

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (துணை கேப்டன்), லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிடி ஹசன் மிராஸ், நசுன் அகமது, ஷாக் மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிஜூர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஷிம் ஹசன் ஷாகிப். 

Follow Us:
Download App:
  • android
  • ios