இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 1-1 என்று வெற்றியோடு ராஜ்கோட்டில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்துக் கொடுக்க 445 ரன்கள் குவித்தது.
IND vs ENG 3rd Test: கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்: ஏன் தெரியுமா?
பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் செய்த தவறால் இங்கிலாந்து அணி 5 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் பந்து வீசியும் விக்கெட் விழவில்லை. 11 ஓவர்கள் வரையில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் மாறி மாறி பந்து வீசினர். இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 12ஆவது ஓவர் வீசுவதற்கு வரவழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுக்க மீண்டும் 14ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்திலேயே ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
Ashwin: மெடிக்கல் எமர்ஜென்ஸி காரணமாக விலகிய அஸ்வினுக்கு பதிலாக வந்த மாற்று வீரர் யார் தெரியுமா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே 105 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். அவர் மொத்தமாக 619 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
மேலும், முத்தையா முரளிதரன் (87 டெஸ்ட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (98), அனில் கும்ப்ளே (105), ஷேன் வார்னே (108), கிளென் மெக்ராத் (110) ஆகியோர் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். அதோடு, 500 விக்கெட்டுகள் கைப்பற்றுவதற்கு அஸ்வின் 25,714 பந்துகள் வீசியுள்ளார்.இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
