ஆசியக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
அயர்லாந்து டி20 தொடரை தொடர்ந்து இந்த மாத இறுதியில் ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்குகிறது. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், இது தொடர்பான இந்திய அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது.
பச்சிளம் குழந்தைக்கு உதவி செய்த ஷ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் வீடியோ!
அதில், ரோகித் சர்மா, விராட் கோலி, இஷான் கிஷான், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ஸ் நிறுவனம் தேர்வு செய்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமாக பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
IRE vs IND T20 Series: அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்ற பும்ரா தலைமையிலான குழு!
ஆசியக் கோப்பை தொடரைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.