பச்சிளம் குழந்தைக்கு உதவி செய்த ஷ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் வீடியோ!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் டி20 போட்டி நாளை 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்குகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிடுகின்றன. இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்துகின்றன.
ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என்று கூறியிருந்தார். இதற்கிடையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் 50 ஓவர்கள் கொண்ட பேட்டிங் பயிற்சியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஈடுபட்ட வீடியோ வைரலானது.
IRE vs IND T20 Series: அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்ற பும்ரா தலைமையிலான குழு!
இதைத் தொடர்ந்து கார் விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் பேட்டிங் வீடியோவும் வைரலானது. இதில், அவர் அசராமல் சிக்ஸர் அடிக்கும் வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், தான் ஷ்ரேயாஸ் ஐயரது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பச்சிளம் குழந்தைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்கிறார்.
தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?