IRE vs IND T20 Series: 3 டூர், 3 விதமான கேப்டன்கள் – அயர்லாந்துக்கு எதிராக தொடரும் இந்தியாவின் பரிசோதனைகள்!
அயர்லாந்துக்கு எதிராக 3ஆவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு தற்போது ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 18 ஆம் தேதி நடக்கிறது.
Jasprit Bumrah: இந்திய அணிக்கு 11ஆவது டி20 கேப்டனாக அறிமுகமாகும் ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்த தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியின் ஒரு குழு தற்போது அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், பும்ரா, ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது போட்டி 20 ஆம் தேதியும், 3ஆவது போட்டி 23 ஆம் தேதியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IRE vs IND T20 Series: அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்ற பும்ரா தலைமையிலான குழு!
இந்த நிலையில், இந்திய அணிக்கு 11 ஆவது டி20 போட்டி கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நாளை மறுநாள் நடக்கும் போட்டியின் மூலமாக அறிமுகமாகவுள்ளார். இதுவரையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு சென்ற இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு சென்ற இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். தற்போது 3ஆவது முறையாக அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய அணிக்கு கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?
இந்த தொடர் முழுவதும் அனைவரது பார்வையும் பும்ரா மீதே விழும். இதுவரையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக எந்தப் போட்டியிலும் இடம் பெறாத பும்ரா, ஓராண்டுக்குப் பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார். அடுத்து ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், பும்ரா எப்படி பந்து வீச உள்ளார் என்பதை பொறுத்து அவருக்கு அடுத்த வாய்ப்ப்புகள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
MS Dhoni: தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் போட்டியில் தோனி ரன் அவுட்!