Asianet News TamilAsianet News Tamil

TNPL 2022: மதுரை பாந்தர்ஸ் அபார பவுலிங்! அரைசதம் அடித்து சேப்பாக் அணியின் மானம் காத்த உத்திரசாமி சசிதேவ்

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து 136 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

chepauk super gillies score 135 runs in 20 overs with the help of uthirasamy sasidev fifty against madurai panthers in tnpl 2022
Author
Tirunelveli, First Published Jun 25, 2022, 5:29 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசனில் இன்று நெல்லையில் நடந்துவரும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மதுரை பாந்தர்ஸ் அணி:

என்.எஸ்.சதுர்வேத் (ஏப்டன்), அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆதித்யா, பாலசந்தர் அனிருத், ஔஷிக் ஸ்ரீநிவாஸ், கிரண் ஆகாஷ், ஜெகதீசன் கௌஷிக், கே ராஜ்குமார், ஆர் சிலம்பரசன், சன்னி சந்து, வருண் சக்கரவர்த்தி.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:

கௌஷிக் காந்தி (கேப்டன்), என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஆர் அலெக்ஸாண்டர், எஸ் ஹரிஷ் குமார், ஜெகநாத் ஸ்ரீநிவாஸ், சந்தீப் வாரியர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், எஸ் சுஜய். 

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கௌஷிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். சுஜய் 11 ரன்னிலும், சோனு யாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, ராஜகோபால் சதீஷ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது சேப்பாக் அணி. பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரின் 2வது பந்தில் ஸ்ரீநிவாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மணிமாறன் சித்தார்த்தும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

51 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து சேப்பாக் அணி திணறிய நிலையில், 8வது விக்கெட்டுக்கு உத்திரசாமி சசிதேவும் ஹரிஷ் குமாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். ஹரிஷ் குமார் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக பேட்டிங் ஆடிய உத்திரசாமி சசிதேவ் அரைசதம் அடித்தார். 43 பந்தில் 58 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 5வது பந்தில் தான் ஆட்டமிழந்தார் உத்திரசாமி. 

இதையடுத்து 20 ஓவரில் 135 ரன்கள் என்ற ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடித்து, 136 ரன்கள் என்ற இலக்கை மதுரை பாந்தர்ஸ் அணிக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios