CSK vs GT IPL Final: 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
அகமதாபாத்தில் சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 214 ரன்கள் குவித்தது.
எனக்கு ஈஸியானது நன்றி சொல்றது, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!
அதன் பிறகு சென்னை அணி பேட்டிங் ஆட வந்த போது மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. எனினும் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில், சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்உ 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி படைத்த சாதனைகள்:
சிஎஸ்கே சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் டெவான் கான்வே 2ஆவது இடம் பிடித்துளார்.
733 – மைக்கேல் ஹஸ்ஸி – 2013
672 – டெவான் கான்வே – 2023
ருத்துராஜ் கெய்க்வாட் – 2021
ஃபாப் டூப்ளெசிஸ் – 2021
குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?
அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள்:
939 – விராட் கோலி – ஏபி டிவிலியர்ஸ் (ஆர்சிபி, 2016)
939 - விராட் கோலி – ஃபாப் டூப்ளெசிஸ் (ஆர்சிபி, 2023)
849 – ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே (சிஎஸ்கே, 2023)
791 – டேவிட் வானர் – ஜானி பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2019
756 - ஃபாப் டூப்ளெசிஸ் – ருத்துராஜ் கெய்க்வாட். (சிஎஸ்கே 2021)
கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!
ஒரு வீரராக ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
ரோகித் சர்மா – 6 முறை
அம்பத்தி ராயுடு – 6 முறை
ஹர்திக் பாண்டியா – 5 முறை
கெரான் போலார்டு - 5 முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் – 5 முறை
சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!
சிஎஸ்கே அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:
35 ஷேன் வாட்சன் – 2018
35 ஷிவம் துபே - 2023
34 டுவையின் ஸ்மித் – 2023
34 – அம்பத்தி ராயுடு
ஐபிஎல் ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணிகள்:
200 – கேகேஆர் vs பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு, 2014
191 - கேகேஆர் vs சிஎஸ்கே, சென்னை, 2012
179 - சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை, 2018
171 - சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், 2023 (Revised target in 15 overs)
ரஹானே அடித்த சிக்ஸர்கள் – ஐபிஎல் சீசன்
2023 – 16
2015 – 13
2013 – 11
கடைசி பந்தில் வெற்றி பெற்ற சேஸிங் அணி:
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை 2008
சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், 2023
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஐபிஎல் சீசன்களாக முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்ற அணியே இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த சீசனில் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.