Asianet News TamilAsianet News Tamil

முதல் முறையாக இந்தியாவுக்கு டூர் வந்த கேமரூன் க்ரீன் - பவுண்டரியுடன் முதல் சதமடித்து சாதனை!

முதல் முறையாக இந்தியாவுக்கு வந்த கேமரூன் க்ரீன் தனது முதல் டெஸ்ட் போட்டி சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார்.
 

Cameron Green hit his maiden International hundred on his first tour to India
Author
First Published Mar 10, 2023, 12:46 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் ஆடி வருகிறது. முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் 3 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு கொடுக்கப்பட்ட ஓவியத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்,  கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.

ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவிப்பு: கவாஜா 150*, க்ரீன் 95* - இந்த கூட்டணியை பிரிக்க யாராலயும் முடியல!
 
அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் பங்கிற்கு 38 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் களமிறங்க, அவர் 17 பந்துகளில் ஷமி பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் களமிறங்கினார். கவாஜா மற்றும் க்ரீன் இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இதையடுத்து முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!

இதையடுத்து 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து களமிறங்கினர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். ஆரம்பத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த இருவரும் பின்னர் நிதானமாக வேகத்தை கூட்டினர். அவ்வப்போது பவுண்டரியும் விளாசினார். க்ரீன் ஒரு ரன் எடுத்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 2ஆம் நாள் உணவு இடைவேளையின் போது, ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. இதில், உஸ்மான் கவாஜா 150 ரன்களும், க்ரீன் 95 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

பின்னர், மீண்டும் தொடங்கிய இருவரும் ரன்கள் குவிக்க தொடங்கினர். இதில், க்ரீன் 1 ரன் எடுத்து 96 ரன்னில் இருந்தார். அதன் பிறகு ஷமி ஓவரில் பவுண்டரி விளாசி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கேமரூன் க்ரீன், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அதுவும், இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதுவரையில் 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கேமரூன் க்ரீன் இன்று தனது 20ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன்னதாக, லெஸ் பாவெல் 101, ஃபால் ஷீகென் 114, டீன் ஜோன்ஸ் 210, மைக்கேல் கிளார்க் 151, கிளென் மேக்ஸ்வெல் 104 ஆகியோர் இந்தியாவில் தங்களது முதல் சதத்தை அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையில் கேமரூன் க்ரீன் 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

இந்தியாவில் முதல் சதத்தை பூர்த்தி செய்த ஆஸி, வீரர்கள்:

லெஸ் பாவெல் 101 - சென்னை - 1959/60
ஃபால் ஷீகென் 114 - கான்பூர் - 1969/70
டீன் ஜோன்ஸ் 210 - சென்னை - 1986/87
மைக்கேல் கிளார்க் 151 - பெங்களூரு - 2004/05
கிளென் மேக்ஸ்வெல் 104 - ராஞ்சி - 2016/17
கேமரூன் க்ரீன் 110 - அகமதாபாத் - 2022/23

Follow Us:
Download App:
  • android
  • ios