ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவிப்பு: கவாஜா 150*, க்ரீன் 95* - இந்த கூட்டணியை பிரிக்க யாராலயும் முடியல!

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆம் நாள் உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவித்துள்ளது.
 

Usman Khawaja and Cameron Green Playing Well, Australia Scored 347 runs upto Lunch Break in 2nd day match

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் ஆடி வருகிறது. முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் 3 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்,  கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.

சேப்பாக்கம் கேலரியை திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனி: இப்பவே ரெடியான சிஎஸ்கே ஃபேன்ஸ்!
 
அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் பங்கிற்கு 38 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் களமிறங்க, அவர் 17 பந்துகளில் ஷமி பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் களமிறங்கினார். கவாஜா மற்றும் க்ரீன் இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இதையடுத்து முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

13 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சதமடித்து உஸ்மான் கவாஜா சாதனை! கேமரூன் க்ரீன் பொறுப்பான பேட்டிங்

இதையடுத்து 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து களமிறங்கினர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். ஆரம்பத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த இருவரும் பின்னர் நிதானமாக வேகத்தை கூட்டினர். அவ்வப்போது பவுண்டரியும் விளாசினார். க்ரீன் ஒரு ரன் எடுத்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஷமி, அக்‌ஷர் படேல், உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா என்று எல்லோரையும் பயன்படுத்தி பார்த்தாலும் ஒரு பயனும் இல்லை. கவாஜா மற்றும் க்ரீன் ஜோடியை பிரிப்பதற்கு இந்திய அணியினர் போராடி வருகின்றனர். இந்த ஜோடி 168 ரன்களுக்கு மேல் ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. 

தற்போது உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா 150 ரன்களும், க்ரீன் 95 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். 

WPL 2023: டெல்லி கேபிடள்ஸை வெறும் 105 ரன்களுக்கு பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios