Asianet News TamilAsianet News Tamil

INDW vs AUSW: 2வது டி20யில் பெத் மூனி, மெக்ராத் அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி பெத் மூனி மற்றும் மெக்ராத்தின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 187 ரன்களை குவித்து, 188 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

beth mooney and tahlia mcgrath fifties help australia womens team to set tough target to india in second t20
Author
First Published Dec 11, 2022, 8:50 PM IST

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஒரே இரட்டை சத இன்னிங்ஸில் சீனியர் வீரரின் கெரியரை காலி செய்த இஷான் கிஷன்

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, மேக்னா சிங், ரேணுகா தாகூர் சிங்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

பெத் மூனி, அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தாலியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, லிட்ச்ஃபீல்ட், அனாபெல் சதெர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், கிம் கார்த், மெகான் ஸ்கட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைசா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்த மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி, இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மெக்ராத்தும் அவருடன் இணைந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

பெத் மூனி மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங்  ஆட, கடைசி வரை இவர்களின் விக்கெட்டை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. பெத் மூனி 54 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 82 ரன்களையும், மெக்ராத் 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 70 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 187 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 188 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios