Asianet News TamilAsianet News Tamil

டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை வழங்கிய பிசிசிஐ!

டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னர், செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இணைந்து வழங்கினர்.

BCCI gave Rs 125 crore prize money to the Indian team who won the T20 World Cup trophy rsk
Author
First Published Jul 4, 2024, 11:02 PM IST | Last Updated Jul 5, 2024, 10:16 AM IST

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து பார்படாஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பெரில் சூறாவளி அச்சுறுத்தலை கடந்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முதலில் டிராபியோடு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை. மேலும், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டிராபியை பிடித்திருந்த நிலையில் இருவரது கையையும் பற்றியவாறு பிரதமர் மோடி போஸ் கொடுத்திருந்தார்.

 

 

இதைத் தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். மிகவும் ஜாலியாக சென்ற இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன் பிறகு அவருடன் விருந்து அருந்திய இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து மும்பை விமானம் நிலையம் சென்றனர். இதற்கிடையில் பிரதமர் மோடியுடன் தனது மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோருடன் இணைந்து பும்ரா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மோடி தனது கையில் பும்ராவின் மகன் அங்கத்தை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த டிராபி ஒட்டுமொத்த தேசத்திற்கு சொந்தமானது – இந்த அணியை வழிநடத்த நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி – ரோகித் சர்மா!
 

இதே போன்று வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோருடன் இணைந்து மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விராட் கோலியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் தான் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்திய வீரர்கள் தங்களது எக்ஸ் பக்கங்களில் டுவீட் பதிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மும்பை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்து மரைன் டிரைவ் வந்தனர். அங்கு நரிமன் பாய்ண்டிலிருந்து திறந்தவெளி பஸ்ஸில் வான்கடே மைதானம் வந்தனர்.

மும்பை வந்த இந்திய அணி வீரர்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை கொடுத்த விமான நிலையம் - Watch Video!

அப்போது பேசிய ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்பட இந்திய அணி வீரர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடியதை நினைவுகூர்ந்தார். அதன் பிறகு ராகுல் டிராவிட், விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா பேசினர். கடைசியாக இந்திய அணி வீரர்களுக்கான ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் இணைந்து வழங்கினர். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து வான்கடே மைதானத்தில் டான்ஸ் ஆடினர்.

ஹர்திக் பாண்டியாவின் ஆட்டிடியூடை மாற்றிய டி20 உலகக் கோப்பை – வான்கடேயில் எதிரொலித்த பாண்டியா கோஷம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios