ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஓவராக ஆட்டிடியூட் காட்டிய நிலையில் அவரை விமர்சனம் செய்த ரசிகர்கள் இன்று வான்கடே மைதானத்தில் ஹர்திக் ஹர்திக் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற 17ஆவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதம், ரோகித் சர்மாவை பீல்டிங்கில் அலைக்கழிக்கச் செய்த விதம் ஆகியவற்றின் காரணமாக எல்லாம் அவர் மீது ரசிகர்கள் வெறுப்பை கொண்டினர். இந்த தொடரில் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து தொடரிலிந்து வெளியேறியது. ஆனால், இன்று இதே வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஹர்திக் ஹர்திக் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தது. இதைத் தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு காலை முதல் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். காலை டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்று அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

அதன்பிறகு டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மும்பைக்கு புறப்பட்டனர். மும்பையில் இன்னும் சற்று நேரத்தில் வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற உள்ளது. இதற்காக மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மும்பையை சூழந்துள்ள அரபிக்கடலை டி20 டிராபியை வென்று திரும்பிய இந்திய அணி வீரர்களை காண குவிந்த ரசிகர்களின் கூட்டம் அதிகம்.

தற்போது வான்கடேயில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்திய அணி வீரர்களை ஏற்றச் சென்ற பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையம் வந்துள்ளனர். இதற்கிடையில் டிரைடண்ட் ஹோட்டல், மரைன் டிரைவ், வான்கடே ஸ்டேடியம் என்று வழி நெடுகிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வான்கடே மைதானத்தில் குவிந்துள்ள ரசிகர்கள் ரோகித் சர்மா என்றும், ஹர்திக் பாண்டியா என்றும் ஹோஷமிட்டு வருகின்றனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…