ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு பாபர் அசாம் செய்த ஆறுதல் டுவீட் கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

சதம் அடிக்கவில்லை என்றாலும், நன்றாக ஆடி அரைசதம், 70-80 ரன்களாவது அடித்துக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஓராண்டாக அதுவும் அடிக்காமல், மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார்.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செம கெத்தாக வலம்வந்த விராட் கோலி, இன்றைக்கு கூனிக்குருகி இருக்கிறார்.

இதையும் படிங்க - ENG vs IND: படுமோசமாக சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! 2வது ODIயில் 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

விராட் கோலிக்கு ஆதரவாக ஒருசிலரே பேசுகின்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோலிக்கு ஆதரவாக இருந்துவருகிறார். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் கோலியுடன் ஒப்பிடப்படும் வீரரான பாபர் அசாமும், விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கிறார்.

சமகாலத்தின் சிறந்த வீரர் கோலியா - பாபர் அசாமா என்ற விவாதம் நடந்துவருகிறது. அந்தளவிற்கு சிறந்த வீரர் பாபர் அசாம். ஆனாலும் விராட் கோலியின் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அவருக்கு ஆதரவாக பாபர் அசாம் செய்திருக்கும் டுவீட், கோலி மீதான அவரது அன்பு, அக்கறை, மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க - WI vs IND: டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேஎல் ராகுல் கம்பேக்.. அஷ்வினுக்கு மீண்டும் டி20 அணியில் இடம்

கோலி குறித்து பாபர் அசாம் பதிவிட்ட டுவீட்டில், இதுவும் கடந்து போகும். மன உறுதியுடனும் வலிமையுடனும் இருங்கள் என்று பாபர் அசாம் டுவீட் செய்துள்ளார்.

பாபர் அசாமின் இந்த டுவீட், கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. சமகாலத்தில் தனக்கு கடும் போட்டியாளரான வீரராக இருந்தாலும் கூட, கோலிக்கு ஆதரவாக பாபர் அசாம் டுவீட் செய்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.

Scroll to load tweet…