Asianet News TamilAsianet News Tamil

WI vs IND: டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேஎல் ராகுல் கம்பேக்.. அஷ்வினுக்கு மீண்டும் டி20 அணியில் இடம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

india t20 squad announced for west indies series
Author
Chennai, First Published Jul 14, 2022, 2:49 PM IST

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட், டி20 தொடர்கள் முடிந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இன்று(ஜூலை 14) 2வது ஒருநாள் போட்டியும், வரும் 17ம் தேதி கடைசி ஒருநாள் போட்டியும் நடக்கின்றன. அத்துடன் இங்கிலாந்து தொடர் முடிகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஃபிட்டாக இருந்தால் அணியில் இடம்பெறுவர். இல்லையெனில் இடம்பெறமாட்டார்கள்.

இதையும் படிங்க - ஐசிசி டி20 தரவரிசையில் 44 இடங்கள் முன்னேறி டாப் 5க்குள் நுழைந்த சூர்யகுமார் யாதவ்..! அபரிமிதமான முன்னேற்றம்

சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios