951 நாட்களுக்குப் பிறகு ஐசிசி ரேங்கிங் பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்த பாபர் அசாம் – சுப்மன் கில் முதலிடம்!

ஐசிசி வெளியிட்ட ஆண்களுக்கான ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 951 நாட்களுக்குப் பிறகு தனது முதலிடத்தை இழந்துள்ளார்.

Babar Assam lost the No. 1 spot in the ICC ODI Batting rankings after 951 days and Shubman Gill Become number one

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும், 11 நாட்களில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் அரையிறுதி வாய்ப்புகளை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

England vs Netherlands: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கிலாந்து – டாஸ் வென்று பேட்டிங்!

தற்போது 4ஆவது இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், நெதர்லாந்து அணிக்கும் ஒரு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் தோல்வி அடைந்தால் நெதர்லாந்து அணியும் தொடரிலிருந்து வெளியேறும்.

இந்த நிலையில், தான், இதுவரையில் நடந்த 6 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 16, 53, 26, 9, 92, 23 என்று மொத்தமாக 219 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளையாடிய 8 போட்டிகளில் மொத்தமாக 282 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் ஐசிசி வெளியிட்ட ஆண்களுக்கான ஒரு நாள் போட்ட் தரவரிசைப் பட்டியலில் பாபர் அசாம் 824 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

ஷமி நன்றாக விளையாடினால், நல்லா சம்பாதிப்பார் – மகளுக்கு உதவியாக இருக்கும் – முன்னாள் மனைவி ஹசின் ஜஹான்!

கடந்த 951 நாட்கள் வரையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து 2ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் இளவரசர் என்று சொல்லப்படும் சுப்மன் கில் 830 புள்ளிகள் உடன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 770 புள்ளிகள் உடன் 4ஆவது இடமும், ரோகித் சர்மா 739 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

இதே போன்று பவுலிங்கில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 661 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், ஜஸ்ப்ரித்ட் பும்ரா 654 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

கிளென் மேக்ஸ்வெல்லின் 201 ரன்கள் சாதனைக்கு தோனி தான் காரணமா? திகைக்க வைக்கும் பின்னணி காரணம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios