பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில், முன்னாள் வீரர் மொயின் கானின் மகன் அசாம் கான், சர்ஃபராஸ் அகமது தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆடிவருகிறார். 

நேற்று கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அசாம் கானின் சிறப்பான பேட்டிங்கால்தான் கிளாடியேட்ட்டர்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணி, 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது. 157 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு, அதிரடியாக ஆடி 30 பந்தில் 46 ரன்களை விளாசி அசாம் கான் வெற்றியை தேடிக்கொடுத்தார். அசாம் கானின் அதிரடியால் 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

Also Read - போராட்டமே இல்லாமல் சரணடைந்த இந்தியா.. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி

இந்த போட்டியில் எதிரணியினர் தன்னை ரன் அவுட் செய்ய முயலும்போது, வேகமாக ரன் ஓடிய அசாம் கான், பேட்டை தலைகீழாக பிடித்து, ஹேண்டிலை க்ரீஸுக்குள் விட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.