மேடையில் குத்தாட்டம் போட்ட அக்ஷர் படேல் - மேகா: சோஷியல் மீடியாவையே அதிர வைக்கும் வீடியோஸ்!
அக்ஷர் படேல் மற்றும் மேகா இருவரும் இன்று திருமணம் செய்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் கிரிக்கெட் வீரர் அக்ஷர் ராஜேஷ்பாய் படேல். உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபி, துலிப் டிராபி மற்றும் தியோதர் டிராபி போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.
நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!
இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29ஆவது பிறந்தநாளன்று இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அக்ஷர் படேலின் 29ஆவது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேகாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். முகமது கைஃப் உள்பட ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருமண வரவேற்பு எப்போது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Hockey World Cup 2023: ஜப்பானை கோலே அடிக்கவிடாமல் 8 கோல்களை அடித்து இந்தியா அபார வெற்றி
தனது திருமணத்தை முன்னிட்டு மேடையில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகா இருவரும் ஹிந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர். தற்போது நியூசிலாந்து தொடரில் ஓய்வில் இருக்கும் அக்ஷர் படேல் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.