Hockey World Cup 2023: ஜப்பானை கோலே அடிக்கவிடாமல் 8 கோல்களை அடித்து இந்தியா அபார வெற்றி
ஹாக்கி உலக கோப்பையில் 9-16 இடங்களுக்கான போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஹாக்கி உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, ஸ்பெய்ன், பெல்ஜியம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, கொரியா, நெதர்லாந்து, கொரியா ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதி சுற்றில் ஸ்பெய்ன், நியூசிலாந்து, இங்கிலாந்து, கொரியா ஆகிய 4 அணிகளை வீழ்த்தி முறையே ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
9-16 இடங்களுக்கான போட்டிகள் நடந்துவருகின்றன. அதில் இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் ஜப்பான் மீது தொடக்கத்திலிருந்து முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய இந்திய அணி ஜப்பானை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல், 8 கோல்களை அடித்த இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அர்ஜெண்டினா - சிலி அணிகளுக்கு இடையேயான மற்றொரு போட்டியில் அபாரமாக ஆடிய அர்ஜெண்டினா அணி 8-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.