கையில் இளநீருடன் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்த தோனி: ஜெர்சியில் கையெழுத்து வாங்கிய இஷான் கிஷான்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்திய வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.

MS Dhoni sharing his thoughts in the Indian team dressing room in Ranchi Ahead of IND vs NZ 1st T20 Match

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சொந்த ஊர் ராஞ்சி. இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடக்கிறது. இதன் காரணமாக இன்று ராஞ்சியில் பயிற்சி மேற்கொள்ள டிரெஸ்ஸிங் ரூமில் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கையில் இளநீர் வைத்துக் கொண்டே தோனி அங்கு வந்தார்.

 

 

அவரைக் கண்ட இந்திய வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தோனி சந்தித்து பேசினார். இதற்கிடையில் இஷான் கிஷான் தனது ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்து வாங்கினார். வாஷிங்டன் சுந்தருக்கு அறிவுரைகள் வழங்கியிருக்கிறார் என்பது வீடியோவைப் பார்க்கும் போது தெரியவருகிறது.

Hockey World Cup 2023: ஜப்பானை கோலே அடிக்கவிடாமல் 8 கோல்களை அடித்து இந்தியா அபார வெற்றி

தோனியை சந்தித்தது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: மஹி பாய் இங்கு வந்திருக்கிறார். அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு மாதங்களில் நாங்கள் விளையாடிய விதம் ஹோட்டலுக்கு ஹோட்டல் என்று தான் இருந்தது. தோனியை சந்திக்கும் போது விளையாட்டை விட வாழ்க்கையைப் பற்றி தான் பேச முயற்சிப்போம். நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகளை நான் பிழிந்து எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என்று இழந்த நிலையில், தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

காயத்திலிருந்து மீண்ட ஜடேஜா.. தமிழ்நாடு அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தல்..!

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஞ்சி டிராபியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா இந்த டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். ராஞ்சியில் நடந்த 22 டி20 போட்டிகளில் இந்தியா 12 போட்டிகளிலும், நியூசிலாந்து 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

அவரு புடிச்சா புளியங்கொம்பு தான்.. ODI உலக கோப்பையில் கண்டிப்பா ஆடணும்..! ஆல்ரவுண்டருக்கு இர்ஃபான் பதான் ஆதரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios